ஊருக்கு நாத்திகவாதி, வீட்டுக்கு ஆத்திகவாதி: திமுகவினரை விளாசிய ஜெயகுமார்!
திமுகவினர் வெளியே நாத்திகவாதிகளாகவும், வீட்டில் ஆத்திகவாதிகளாகவும் இருப்பதாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நீருக்குள் இருந்து எழுந்தருளி காட்சி தரும் அத்தி வரதரை பக்கர்கல் காண குவிந்து வருகின்றனர். தினமும் அதிகாலையில் இருந்தே வெளியூர், உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தனது குடும்பத்தினர் அத்திவரதரை தரிசிக்க விவிஐபி நுழைவு சீட்டு மற்றும் வாகன அனுமதி அளிக்கும்படி காஞ்சிபுரம் கலெக்டருக்கு அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் கடிதம் அனுப்பியதாக ஒரு புகைப்பட சமூக வலைத்தளங்கலில் வைரலானது.
இது குறித்து இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், திமுகவினர் வெளியே நாத்திகவாதிகளாகவும், வீட்டில் ஆத்திகவாதிகளாகவும் இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை குறித்து திமுகவினர் இனியும் இரட்டை வேடம் போடத் தேவையில்லை என விமர்சித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அத்திவரதரை தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.