வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜனவரி 2018 (13:38 IST)

நீட்டி முழக்கி பேசும் தமிழிசைக்கு விஜயேந்திரர் விவகாரம் தெரியாதாம்: அடடே ஆச்சரியக்குறி!

சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செய்யாமல் மேடையில் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தி எழுந்து நின்றனர்.
 
ஆனால் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செலுத்தானல் அமர்ந்து இருந்துவிட்டு, தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்து நின்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜயேந்திரரின் இந்த செயல்பாடு தமிழகத்தில் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சை சம்பவம் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
 
ஆனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு இந்த விவகாரம் பற்றி தெரியாதாம். தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் இது, அவர்கள் கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர் எச்.ராஜா சம்பவம் நடந்த மேடையில் இருந்திருக்கிறார். இது நேற்று நடந்த சம்பவம், இன்று வரைக்கும் இது குறித்த தகவலே தமிழிசைக்கு கிடைக்கவில்லையா என சாதாரணமாகவே சந்தேகம் எழுகிறது.
 
ஆண்டாள் விவகாரத்தில் நீட்டி முழக்கி பேசிய தமிழிசை வைரமுத்து மனதார பகிரங்க மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கூறினார். ஆனால் தமிழனைக்கு அவமனாம் ஏற்பட்டது குறித்து தமிழை பெயராக கொண்ட தமிழிசை அக்கறையில்லாதது போல இந்த விவகாரம் குறித்து தெரியாது என பேசியுள்ளார்.
 
தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள் நீங்கள் சொன்னதை அப்படியே நம்பிவிட்டார்கள். உங்களுக்கு இந்த விவகாரம் குறித்து தெரியாது தான்.