திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜனவரி 2018 (13:26 IST)

மயிரிழையில் உயிர் தப்பித்த இளம் பெண்கள் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

லாரி டிரைவரின் சாமாத்தியர்த்தால் பெரும் விபத்திலிருந்து இரு இளம்பெண்கள் தப்பித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
விபத்துக்கள் எப்போதும் கவனக்குறைவு காரணமாக, மயிரிழையில் நடந்து விடுகிறது. சிலர் அதிர்ஷடவசமாக தப்பி விடுகின்றனர். ஆனால், பலர் விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர்.
 
இந்நிலையில், இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. ஒரு சாலையில் ஒரு லாரி சென்று கொண்டிருக்கிறது. அப்போது அதை கவனிக்காமல் ஒரு ஸ்கூட்டியில் இரு இளம் பெண்கள் வேகமாக சென்று, லாரியின் அடியில் சிக்கி விட, அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் பிரேக் போட அப்பெண்கள் மயிரிழையில் உயிர் தப்பித்தனர்.
 
இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...