"பாஜக இல்லையெனில் அதிமுக எதிர்க்கட்சியாகி இருக்க முடியாது"..! எல்.முருகன் பதிலடி.!!
பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார். முளைத்து மூன்று இலை கூட விடவில்லை, அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் 2026ல் தனியாக நின்று ஒரு சீட் ஜெயித்து பாருங்கள் என்றும் ஜெயக்குமார் சவால் விடுத்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது என்று விமர்சித்துள்ளார். பாஜக ஓட்டுகளை மாநிலம் முழுவதும் அதிமுக வாங்கியுள்ளது என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.