ரஜினி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினாரா தமிழருவி மணியன்?

tamilaruvi
ரஜினி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினாரா தமிழருவி மணியன்?
Last Updated: புதன், 29 ஜூலை 2020 (11:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி விடுவார் என்றும் செய்திகள் வெளியாகின
அவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு பெரும் ஆதரவாளராக இருந்த தமிழருவி மணியன் திடீரென அவரிடமிருந்து விலகி விட்டதாக வதந்திகள் வெளியாகின

இந்த வதந்திகள் குறித்து தமிழருவி மணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.ரஜினி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து தான் விலகியதாக வெளியான தகவல் பொய்யானது என்றும் வதந்தி என்றும் அதனை நம்ப வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனது அரசியல் வாழ்வு ரஜினியை ஆதரிப்பதோடு மட்டுமே முடிவடையும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியால் தான் தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தரமுடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் சற்றுமுன் அளித்த பேட்டியை அவர் குறிப்பிட்டு உள்ளார்

எனவே ரஜினி ஆதரவு நிலையில் இருந்து தமிழருவி மணியன் விலகியதாக வந்த தகவல் வதந்தி என்பது இந்த பேட்டியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :