திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (18:39 IST)

’’ ராட்சசன் ‘’படத்தை 17 ஹீரோக்களும் 22 தயாரிப்பாளர்களும் நிராகரித்தனர் - நடிகர் தகவல் !

பலிவுட் நடிகர் சுஷாந்த் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிகுள்ளாக்கியது. அதன்பிறகு பாலிவுட்டில் வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக பலரும் குற்றம் சாட்டினர்.

ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் தனக்கான வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிப்பாதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். நடிகை தமன்னா தனக்காக விருதுகள் வாரிசுகளுக்கு தரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் நேற்று கவிஞர்  வைரமுத்து ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக டுவீட் பதிவிட்டார்

அதேபோல், வனிதா விஜயகுமார்,  மீரா சோப்ரா,  பாடகர் ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா மோகன், உள்ளிட்ட பலர் ரஹ்மானுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில், இங்கேயும் வாரிசு அரசியல் உள்ளது குழு அரசியல்தான் நம்முடன் யார் பணியாற்றவேண்டும் என்பது குறித்து முடிவு செய்கிறார்கள். அதில அவர்கள் மற்றவர்களை அனுமதிக்கவிட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  பிரபல இளம் நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் பட கதை 19 ஹீரோக்களிடமும், சென்றதாகவும், 22 தயாரிப்பாளர்கள் அதை நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததுடன் எல்லோரையும் கவர்ந்தது. இப்படத்தில் வில்லனை நடிகர் ரஜினி அழைத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.