வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 17 பிப்ரவரி 2025 (16:04 IST)

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

மகளிருக்கான இலவச பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மகளிருக்கான இலவச பேருந்துகளை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சிவப்பு நிறத்தில் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்பட்டு வரும் 174 மாநகர பேருந்துகளை விடியல் பயணத்திட்ட பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால், மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்துகள் அதிகரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மகளிருக்கான பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது..

விடியல் பயண பேருந்துகளில், சராசரியாக 63 சதவீதம் பெண் பயணிகள் உள்ளதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் கூடுதலாக, 174 இலவச பேருந்துகளை இயக்குவதன் மூலம் மகளிர்கள் நிம்மதியாக பயணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran