புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 டிசம்பர் 2018 (13:10 IST)

சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மரணம்

சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
புதுவையை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய வானம் வசப்படும் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவர் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றவர். இதே போல தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.
 
இவர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.