வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (15:21 IST)

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Chennai Rain
தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் அதாவது ஜூலை மூன்றாம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Edited by Siva