வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (11:31 IST)

மக்களவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்: சத்ய பிரதா சாகு வெளியீடு!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக தேர்தல் ஆணையர்  இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது என்பதும் ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையே அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சற்று முன் அந்த பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்

இதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் இதில் 3.14 கோடி பெண் வாக்காளர்கள் என்றும் 3.03 கோடி  ஆண் வாக்காளர்கள் என்றும் 8,294 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என்றும் அறிவித்துள்ளார்

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானதை அடுத்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran