செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (17:06 IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு   இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை   உருவாகிக்யுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைவராக உள்ள இந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இடம்பெற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கார்த்திக் சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.