செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (16:27 IST)

பணிமுடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை   உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், கே.எஸ். அழகிரி தலைமையிலான தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு    நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவை அமைச்சர் துரைமுருகன் இன்று  அறிவித்துள்ளார்.

தொகுதி உடன்பாடு பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய திமுக தலைமைக் கழகம், டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைத்துள்ளது. இதில், கே.என். நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா. திருச்சி சிவா, எம்.ஆர்.கே. பன்னீர்ல்செல்வம் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில்,  நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியதாக முதல்வர் இன்று வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிக்கக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் விவரங்களை பகிர்ந்து, பணிமுடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம். என்று குறிப்பிட்டு,  INDIA  வெல்லும் என்ற ஹேஸ்டேக் பதிவிட்டுள்ளார்.