திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (12:32 IST)

ஆவினில் 10 புதிய பால் பொருட்கள் அறிமுகம் - விலை விவரம்!

ஆவின் நிறுவனம் பல்வேறு பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
தமிழக அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழகம் முழுவதும் பால் சொசைட்டி, ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
 
விரைவில் தண்ணீர் பாட்டில்கள் விற்கவும் ஆவின் நிறுவனம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் ஆவினில் பல வகை மில்க் ஷேக்குகள், ஐஸ் க்ரீம்களும் விற்பனையாகின்றன. இந்நிலையில் புதிதாக 10 பால் உணவு பொருட்களை ஆவின் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. 
 
அதன்படி சென்னை ஆவினில் 10 புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார். இதில் பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream), வெள்ளை சாக்லேட் (White Chocolate), கோல்ட் காஃபி (Cold Coffee), வெண்ணெய் கட்டி (Butter Chiplets), பாஸந்தி (Basundi), ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix), பாலாடைக்கட்டி (Processed Cheese), அடுமனை யோகர்ட் (Baked Yoghurt), ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit), ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku )ஆகியவை அடங்கும். 
 
மேலும் இதன் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது, 200 மி.லி. Cold Coffee ரூ.35, 125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் ரூ.45, 100 மி.லி. பாஸந்தி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரியவந்துள்ளது.