வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (11:09 IST)

ஆயுத பூஜை, தீபாவளி… ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு!

தொடர் விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.


தொடர் விடுமுறையை வாய்ப்பாக பயன்படுத்தி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக நேரடி ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆர்டிஓ தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார்.

இருப்பினும் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக உயர்த்தின புகார் எழுந்தது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் செய்த 97 பேருக்கு ரூ.68,800 கட்டணம் திரும்ப வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்தார்.

தொடர் விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீபாவளி, பொங்கல் விழாவின் போது கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி என தொடர் விடுமுறை வருகிறது. வருகிற ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்குள் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். இதுபோன்ற பிரச்னை வராமல், அதை எப்படி கையாள்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.