1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (12:22 IST)

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல். 

 
பிப்.18 முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
 
அதன்படி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 21 ஆம் தேதி மேற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.