1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (10:21 IST)

திமுகவுக்கு வாக்கு சேகரித்த வெளிநாட்டவருக்கு சிக்கல்… சாஸ்திரி பவன் நோட்டீஸ்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வெளிநாட்டுக்காரர் வாக்கு சேகரித்து வருவது கோவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூருக்கு பணி நிமித்தமாக வந்த ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டெபன் என்பவர் திமுகவுக்கு ஆதரவாக ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகின்றார்.

கோவையில் பேருந்து ஒன்றில் பயணித்தபோது பெண்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவரது நண்பர் கோகுல் என்பவருக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போது அவர் மகளிருக்கு அரசின் இலவச பயணத்திட்டம் பற்றி சொன்னதும் வியந்த ஸ்டெபன், திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதாக கூறினார்.

இந்நிலையில் குடியேற்ற விசாவில் வந்துள்ள அவர் விதிமுறைகளை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மத்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை ஆவணங்களோடு நேரில் ஆஜராஜ சொல்லியுள்ளனர். அவரது விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.