நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
மேலும் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 6, நிலக்கோட்டை, சுருளக்கோடு, வால்பாறையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.