திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (08:50 IST)

சென்னை உள்பட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

rain
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் பல்வேறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது