1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain for next 5 days

தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு கனமழை!

தமிழகம்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 14 ஆம் தேதியான இன்று 26 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை சாந்தினி!