1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain for next 5 days

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட்