நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது?? நீதிமன்றம்
நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்ப பெறக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில், இது கிராம்ப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் என பலர் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். மேலும் நீட் ஆள்மாறாட்டத்தில் சில மாணவர்கள் சிக்கிய செய்திகளும் வெளிவந்தன.
இந்நிலையில் முந்திய காங்கிரஸ்-திமுக அரசு கொண்டுவந்த நீட் தேர்வை தற்போதுள்ள அரசு ஏன் திரும்ப பெறக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நீட் பயிற்சி மையங்களால் பயிற்சிக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து பிற மாநிலங்களில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக நேரடி புகார்கள் வந்ததுள்ளனவா? என மத்திய அரசு பதில் தரவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள செய்தி குறிப்பிடத்தக்கது.