1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP Challenges MK Stalin for say thirukural with meaning

துண்டு சீட்டை பார்க்காமல் திருக்குறள் சொல்லுங்க! – ஸ்டாலினுக்கு பாஜக சவால்!

Tamilnadu
திருவள்ளுவர் ஆடை சர்ச்சையில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்த தமிழக பாஜக பார்த்து படிக்காமல் திருக்குறளை சொல்லுமாறு சவால் விடுத்துள்ளது.

திருவள்ளுவர் காவி வண்ண உடை அணிந்திருப்பது போல் பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமறை கருத்து பேசிய திருவள்ளுவருக்கு பாஜக காவி சாயம் பூச முயல்வதாக தி.க மற்றும் தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏற்கனவே திருவள்ளுவர் காவி உடைதான் அணிந்திருந்ததாகவும் திராவிட கழக ஆட்சியில் அந்த அடையாளம் அழிக்கப்பட்டதாகவும் பாஜகவினர் வாதாடினர்.

இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி அரசியல் செய்ய பார்க்கின்றனர்’ என்று குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த பாஜக தமிழ்நாடு ட்விட்டர் பக்கம் “"யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம்” என்று கூறியுள்ளனர். மேலும் ஹேஷ்டேகில் ‘துண்டுசீட்டு’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். அது ஸ்டாலின் குறிப்புகளை சீட்டில் வைத்துக் கொண்டு படிப்பதை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாக திமுகவினர் கோபமடைந்துள்ளனர்.

இதை கண்டித்து திமுகவினர் கமெண்டுகளில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்! – மு.க.ஸ்டாலின் ட்வீட்