1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamil nadu to have rain

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை - எங்கெங்கு தெரியுமா?

Heavy Rain
அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல். 
 
ஆம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல். 
 
மேலும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூரில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகரிலும் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தொடக்கப் பள்ளிகள் திறப்பு - எங்கு? எப்போது? தெரியுமா?