புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (10:58 IST)

ஆளுநர் பதவியேற்றார் ஆர் என் ரவி!

தமிழகத்துக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர் என் ரவி சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். எனவே, தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள இவர் நாகாலாந்து மாநில கவர்னராக இருந்தவர். 

ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் இன்று காலை அவர் தமிழக ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமானம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.