1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (22:42 IST)

அவசர உதவி தேவையா? இந்த எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்: தமிழக பேரழிவு மேலாண்மை ஏஜென்சி அறிவிப்பு

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து பெரும்பாலான இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தமிழக பேரழிவு மேலாண்மை ஏஜென்சி முக்கிய  அறிவிப்பு ஒன்றை இன்று இரவு பத்து மணிக்கு வெளியிட்டுள்ளது.


 


இதன்படி இன்று இரவு முழுவதும் சென்னையில் மழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் 24 மணி நேரங்களும் அரசு அதிகாரிகள் பணியில் இருப்பதால் அவசர உதவி தேவைப்படுபவர்கள் உடனடியாக கீழ்க்கண்ட எண்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக அதிகாரிகளும் மீட்புப்படையினர்களும் விரைந்து உதவிக்கு வருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.