அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடக்கும்
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
]
அதேபோல் காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் கல்லூரிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.