1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (21:41 IST)

சென்னை கனமழை எதிரொலி: அமைச்சர்கள் அதிகாரிகள் அவசர ஆலோசனை

சென்னையில் மாலை ஆறு மணி முதல் கனமழை பெய்து வருவதால் மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் பில்டிங் கட்டிடத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்



இந்த ஆலோசனையில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உடனடியாக தாழ்வான பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று அங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் அன்புசெல்வன் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்

ஆனால் இந்த மழையில் அதிகாரிகள் மழை பாதித்த பகுதிக்கு செல்வார்களா? என்ற கேள்விக்குறி உள்ளது. மேலும் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் இரண்டு அடிக்கும் மேல் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகளும், அமைச்சர்களும் செயல்பட போவது எப்படி? என்பது கேள்விக்குறியாக உள்ளது.