1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (12:21 IST)

தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: ரயில்வே அமைச்சர்

railway
தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ் தெரியாதவர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 தமிழகத்தில் பணிபுரியும் பல ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரியாததால் பயணிகள்  கடும் அவதி யில் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ், தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது