1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 மே 2022 (21:51 IST)

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பு இல்லை: ரயில்வே அமைச்சர்

train
மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைக்கு இனி வாய்ப்பு இல்லை என ரயில்வே அமைச்சர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான 50 சதவீத சலுகை ரயில் கட்டணம் இனி தொடர வாய்ப்பில்லை என சென்னையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்துள்ளார் 
 
இந்த கட்டண செலவை நிறுத்தப்பட்டதால் ரயில்வே துறைக்கு 1500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக சமீபத்தில் ரயில்வே துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மூத்த குடிமக்களுக்காக 50% ரயில் கட்டண சலுகை இனி தொடர வாய்ப்பில்லை என ரயில்வே அமைச்சர் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது