திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 மே 2022 (23:10 IST)

ஆப்கன் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்களுக்கு கட்டுப்பாடு: தாலிபன்கள்

ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் மற்றும் திரையில் தோன்றும் பெண்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பும்போது தங்களுடைய முகத்தை மறைக்குமாறு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
 
இது தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் பிபிசி பாஷ்தோ சேவையிடம் கூறினார்.
 
ஆப்கானிஸ்தானில் அனைத்து பெண்களும் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடையை அணிய வேண்டும் அல்லது தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆணையை தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களுக்கு ஆண் பாதுகாவலர் இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில், காபூலில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் ஒரு பெண் ஆப்கானிஸ்தான் செய்தியாளர் சமீபத்திய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.
 
தமது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத அவர், "தொலைக்காட்சியில் நாங்கள் தோன்றிப் பேசுவதை நிறுத்த அவர்கள் (தாலிபன்கள்) எங்களுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கிறார்கள்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்..