கர்ப்பிணிகளுக்கு தடுப்புசி: தமிழகத்திற்கு முதலிடம்!!
நாட்டிலேயே கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக தடுப்பூசி போட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு.
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் ஏறத்தாழ பல கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்,
நாட்டிலேயே கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக தடுப்பூசி போட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு. கர்ப்பிணி, பாலூட்டும் தாய், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என தெரிவித்தார். மேலும் வரும் 10 ஆம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் கூறினார்.