1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu is not a meddling puppet state- CM Stalin

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல-முதல்வர் மு.க.ஸ்டாலின்

Hindi Language
தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு அவ்வப்போது  மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி வரும் நிலையில் பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது..

இதற்கு தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான திமுக அரசு எதிர்ப்புகள் கூறி வருகிறது.

இந்த நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‘’ தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல; 1965 மொழிப்புரட்சி காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்.  இந்தி திணிப்பை பல  மாநிலங்கள் எதிர்க்க தொடங்கி இருப்பதை அமித்ஷா உணர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும்; செல்லூர் ராஜூ