வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:10 IST)

கர்நாடகாவில் இந்தி எழுத்துகளை நீக்கி போராட்டம்

karnataka
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடது வருகிறது.    எனவே,  நேற்று, செப்டம்பர் 14 ஆம் தேதியான நேற்று  இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி  குஜராத்தில் சூரத் நகரில் நடந்த  இந்தி மொழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா,  அலுவலக மொழியான இந்தி  தேசத்தை  ஒற்றுமையில் ஒருங்கிணைக்கிறது.

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பாக இருப்பதால் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு இணையாக இந்தி வளர்க்க மோடி உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ்  பொம்மை தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருவதால்,  அங்கு இந்தி மொழி தினத்தைக் இந்தி திவாஸ் 2022 கொண்டாட கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  முன்னாள் முதல்வர் குமாரசாமிதலைமையில் நேற்று மதச்சார்பற்ற கட்சியினர் போராட்டம் நடத்தினர்,


ஏற்கனவே இந்தி எதிர்ப்பு தமிழகம், கேரளாவில் தீவிரமாக உள்ள நிலையில், கர்நாடகாவில் சிலர்  இந்தி பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துகளை நீக்கி போராட்டத்தில் ஈடுப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.