செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 மே 2020 (19:24 IST)

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுவது ஏன்? தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் எல்லையில் உள்ள பொதுமக்கள் மாநில எல்லைகளை கடந்து செல்வதை தடுப்பதில் சிரமம் இருப்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
 
கொரோனா வைரஸ்‌ தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில்‌ சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின்‌ ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல்‌ மேலும்‌ இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்‌ மதுபானக்கடைகள்‌, சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும்‌ மதுபானக்கூடங்கள்‌ திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில்‌ தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில்‌ மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
இதனால்‌ தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும்‌ கர்நாடகா மாநிலங்களில்‌ உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில்‌ உள்ள மக்கள்‌ அதிக அளவில்‌ செல்வதால்‌, மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்‌ நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில்‌ பெரும்‌ சிரமம்‌ ஏற்படுகிறது. இவற்றை கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாட்டிலும்‌ மதுபானக்கடைகளை வரும்‌ 7.5.2020 முதல்‌ திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும்‌ நோய்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள்‌ திறக்கப்படமாட்டாது. 
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது