பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு எப்போது? விவரம் உள்ளே

Last Updated: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (19:31 IST)
இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வலையில் இந்த முறை எந்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 
 
செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு, பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக 11, 12, 13, 14 ஆகிய நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. 
 
சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் என மொத்தம் 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், இதில் பயண்ச்சீட்டு முன்பதிவுக்கு ஜனவரி 9 ஆம் தேதி சிரப்பு மையங்கள் திறக்கப்படும். 
 
பண்டிகை முடிந்து திரும்பி வருவோருக்கான பேருந்துகள் இயக்கம் பற்றி ஜனவரி 2 ஆம் தேதி முடிவெடுக்கப்படும். எப்போதும் போல, மாதவரம், தாம்பரம் மெப்ஸ், கே.கே.நகர், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 


இதில் மேலும் படிக்கவும் :