பிளாஸ்டிக்கை அடுத்து தெர்மோகோலுக்கும் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Last Modified செவ்வாய், 25 டிசம்பர் 2018 (08:49 IST)
வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் தெர்மோகோல் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வரும் 1ம் தேதி முதல் மாணவர்களின் செயல்வழி கற்றலுக்கு தெர்மாகோல் பயன்படுத்த கூடாது என்றும் அதேபோல் மாணவர்கள் மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வர கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பைகள், ஸ்ட்ரா, உணவு அருந்தும் மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள் உள்ளிட்ட பொருட்களையும் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளிகளில் பிளாஸ்டிக் இல்லா சூழலை கொண்டு வர வேண்டும் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வ்ழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :