திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (11:35 IST)

"5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா" - தமிழக அரசு அதிரடி

5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத இடங்களில், வசித்து வரும் ஏழை - எளிய மக்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
ஏழை - எளிய மக்கள்,    5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத இடங்களில், வசித்து வந்தால் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என , தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு, வெளியிட்டு உள்ளது. இதன்படி, பட்டா பெறும் குடும்பங்கள், ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்க வேண்டும். அனைத்து விதமான நீர் நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் குடியிருப்பவர்கள், பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர் சரிபார்த்து, பட்டா வழங்குவார்கள். அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். இவ்வாறு அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது .