புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (21:25 IST)

கரூரில் தமிழ்நாடு தின விழா கொண்டாட்டம் – தமிழறிஞர்கள் மற்றும் திருக்குறள் பேரவை கொண்டாடியது !

மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது.

இந்த மாநிலம் உருவாகி 63 வருடங்களாகியும், தற்போது 64 வது வருடம் தமிழ்நாடு தினமாக பிறக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சிறப்பாக தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சங்ககாலப்புலவர்கள் நினைவுத்தூணின் முன்பு கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டாடினர்.

மேலும், கவிதைப்போட்டிகளையும் கரூர் திருக்குறள் பேரவை நடத்தியது. வரும் நவம்பர் 1 -ம் தேதி கொண்டாடப்படும் தமிழ்நாடு தினத்தினை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்றும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்றதோடு, அதற்காக மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், தமிழில் பெயர் வைக்க நிறுவனங்கள் முன்வரவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.