ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (15:09 IST)

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

TVK Vijay Sarathkumar

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அவர்களது கொள்கை என்ன என்பதை சொல்ல வேண்டும் என பாஜக பிரமுகர் சரத்குமார் கூறியுள்ளார்.

 

நேற்று மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் ஏழை, எளிய மக்களுக்கான சரியான சலுகைகள் இல்லை என பல எதிர்க்கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் மக்களின் அத்தியாவசியமாக உள்ள கேஸ், எரிபொருள் விலை குறைப்பு போன்றவை இல்லாதது ஏமாற்றமளிப்பதாக பட்ஜெட் குறித்து தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, ஆந்திரா என தனித்தனியாக இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நாட்டிற்காகதான் செலவு செய்யப்பட உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திமுகவை எதிர்ப்பதே தனது கொள்கை என்று சொன்னால் அதை ஏற்க முடியாது. முன்பு இருந்த ஆட்சியாளர்கள் எதையெல்லாம் செய்யவில்லை. அவர் எதை மக்களுக்கு செய்யப் போகிறார் என்பதை சொன்னால் அது கொள்கையாக இருக்கும். மக்களுக்காக என்ன செய்வார் என்பதை அவர் சொல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K