ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (13:18 IST)

கொள்கை தலைவர்களின் சிலை திறப்பு.. மலர் தூவி மரியாதை செய்த விஜய்..!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி முதல் ஆண்டு முடிவடைந்து இன்று இரண்டாவது ஆண்டை நோக்கி அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைகளை தலைமை அலுவலகத்தில் திறந்து வைத்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் அதனை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் விக்ரவாண்டியில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தினார் என்பதும் தெரிந்தது .
 
இந்த மாநாட்டில் அவர் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீர வேலுநாச்சியார், மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியவர்களை அறிவித்தார்.
 
இந்த நிலையில் இன்று தவெக இரண்டாவது ஆண்டுக் அடி எடுத்து வைக்கும் நிலையில் கட்சியின் தலைவர் விஜய் தனது கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் இன்று அவர் நலத்திட்ட உதவிகளையும் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்  செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து அறிவிப்பும் என்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva