1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (15:24 IST)

நான் ரவுடி என்பதற்கு ஆதாரம் உள்ளதா.? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்.!

Selvaperundagai
நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
 
செல்வப்பெருந்தகையை ரவுடி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய,  செல்வப்பெருந்தகை அண்ணாமலை  ஐ.பி.எஸ். படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், தலித் சமூகத்தை சேர்ந்த தன்னை பற்றி அவதூறு பரப்பினால் சிறை செல்ல நேரிடும் என்று எச்சரித்தார். ஆணவமும், திமிரும் அண்ணாமலைக்கு எங்கே இருந்து வந்தது என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.   

ஆம்ஸ்ட்ராங் கொலையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன் என அண்ணாமலை சொல்கிறார் என்றும் துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசும் அண்ணாமலைக்கு நாகரீகம் இருக்கிறதா என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

 
வாய் இருக்கிறது என்பதற்காக அவதூறாக பேசினால், சட்டம் பாயும் என அண்ணாமலைக்கு தெரியாதா என்று அவர் கூறினார். அரைகுறையாக அரசியல் படித்துவிட்டு பேசும் அண்ணாமலை என்ன பேசுகிறோம் என யோசித்து பேச வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.