ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?
சமீபத்தில் தொகுதி மறு வரையறை குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், தற்போது நீட் தேர்வை அகற்றுவதற்கு சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவில் கொண்டு, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கும் என்றும், எதிர்காலத்தில் நீட் தேர்வை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்ய ஏப்ரல் 9ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாகவும், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் சார்பாக, அவர்களின் கனவை நினைவில் கொண்டு, தமிழக அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
Edited by Siva