1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (12:53 IST)

நாளை ஜனாதிபதியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்,. என்ன காரணம்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருப்பதாகவும் நாளை அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சென்னை கெண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்க அவர் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிகழ்ச்சிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக கவர்னர் ரவி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களும் இன்று டெல்லி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran