போலீசாரை தாக்கிய வழக்கில் முதல்வரின் சகோதரிக்கு ஜாமீன்
தெலுங்கானாவில் போலீஸாரை தாக்கிய விவகாரத்தில் முதல்வரின் சகோதரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் அரசு பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் முன்கூடிய கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகை இடுவதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா வீட்டில் இருந்து காரில் ஏறுவதற்கு முயன்றார்.
அப்போது அவரை தடுத்த தெலுங்கானா மாநில போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஷர்மிளா போலீசாரை தாக்கியதாகவும் அவரை பெண் போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இதில் சர்மிளாவுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து சர்மிளாவில் வழக்கறிஞர். இந்த விவகாரத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்படி, முதல்வரின் சகோதரிக்கு நம்பள்ளி நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.