திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (19:23 IST)

மணல் கடத்தல் புகார் அளித்த விஏஓ கொலை.. ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

மணல் கடத்தல் புகார் அளித்த தூத்துக்குடி விஏஓ படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண தொகையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் என்பவர் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததாகவும் இதனை அடுத்து படுகொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்னும் சிலரை காவல்துறை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. பட்டப்பகலில் விஏஓ லூர்து பிரான்சிஸ் அவர்களின் கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. 
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் பணியின் போது கொல்லப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
 
Edited by Mahendran