1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (20:10 IST)

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? முதல்வர் பழனிசாமி ஆவேசம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார் 
 
இந்த நிலையில்தான் இன்று முதல்வர் பழனிசாமி தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது ’திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? என எண்ணி பார்க்க வேண்டும் என ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்பட்டார் என்றும் சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதில் தமிழகம் தற்போது முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். 
 
திமுகவின் கோட்டை என்று கூறப்படும் தூத்துக்குடியில் முதல்வரின் இந்த ஆவேசமான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.