திமுகவின் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு..!
ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசி (UGC) இன் புதிய விதிகளுக்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்துள்ளது, ஆனால் பாஜக எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன குழுவை ஆளுநர் முடிவு செய்வார் என்றும், ஆளுநர் பரிந்துரை செய்பவர்தான் குழுவின் தலைவராக இருப்பார். மேலும், யுஜிசி பல்கலைக்கழக உறுப்பினரை பரிந்துரை செய்து, அவர்களை குழுவின் உறுப்பினராக முடியும் என்று புதிய விதி வெளியிடப்பட்டுள்ளது.
இது மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக இருப்பதாக கூறியுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இதை எதிர்த்து தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதேநேரத்தில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவும் இதற்குத் தங்களின் ஆதரவை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva