கொட்டி தீர்க்க போகும் கனமழை – இந்த மாவட்ட மக்களே உஷார்!
10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, அரியலூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.