ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2018 (20:09 IST)

யாரு சொன்னா தமிழை நீக்கியதுனு? இங்க பாருங்க - விளக்கம் அளிக்கும் டுவீட்

காலை சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு விமான போக்குவரத்து பகுதியில் விமான வருகை, புறப்பாடு அறிவிப்பு குறித்த தகவல் பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்தி காலையில் வெளியாகி தீயாய் பரவியது.
 
இதையடுத்து தமிழுக்கு மத்திய அரசு வஞ்சம் செய்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையம் டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில்,
 
நாங்கள் தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல் பலகையில் வழங்கி வருகிறோம் அதற்கு இதோ சான்று என்று பதிவிட்டு அதனுடன் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.