1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 2 மே 2017 (22:04 IST)

புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள்; அதிர்ச்சியடைந்த விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் உள்ள புகார் பெட்டியில் பயணிகள் சிலர் நன்கொடை பெட்டி என நினைத்து காசு போட்டுள்ளனர்.


 

 
இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் நன்கொடை பெட்டி ஒன்று இருக்கும். அது பெரும்பாலும் கண்னாடி பெட்டியாக இருக்கும். அதே போல் சென்னை விமான நிலையத்தில் ஆங்காங்கே புகார் பெட்டி உள்ளது.
 
அதை சில பயணிகள் நன்கொடை பெட்டி என நினைத்துக்கொண்டு அதில் காசு போட்டுள்ளனர். புகார் போட பெட்டியில் காசு நிரம்பியுள்ளது. இதைக்கண்டு சில வெளிநாட்டு விமான பயணிகள் கேலி செய்து சிரிப்பதாக கூறப்படுகிறது.
 
சிறிய கண்னாடி பெட்டியாக இருந்தால் அது நன்கொடை பெட்டியாக மட்டும்தான் இருக்குமா என்ன. இனி அனைவரும் பொது இடத்தில் ஏதேனும் இதுபோன்று சிறிய கண்ணாடி பெட்டி பாரத்தால், அது என்ன பெட்டி என தெரிந்துக்கொண்டு பின் அதில் காசு போடலாமா வேண்டாமா என முடிவு செய்யுங்கள்.